Monday, December 31, 2007

முதல் முத்தம்...

என் நாசிக்குள் புகுந்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் அடர்த்தியில்
உள்ளங்கையின் நோக்கங்களை தொடர்ந்துபோக
சிரமமாகிவிடுகிறது ஒவ்வொரு முறையும்.

உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கி பயணித்துப் பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன

வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேக தடைகளும்.

5 comments:

Dreamzz said...

//உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கி பயணித்துப் பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன

வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேக தடைகளும்.//
Wow! superu.

Hai Rasiga, oru chinna request. It would be really nice if you could also provide a backlink to the website and the author name.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

கவிதையைப்பற்றி பின்னர் comment'டுகிறேன்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இரசிகா :)

நவீன் ப்ரகாஷ் said...

//வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன

வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேக தடைகளும்.//

வழிதவறிய இதழ் 'கள்'

மிக மிக அழகான வரிகள் ரசிகா...
மிகவும் ரசித்தேன் முதல் முத்தம்...

ஆமாம் வேகத்தடைகள் எப்படி
நினைவுபடுத்தும் ...?? கொஞ்சம்
முரணாக இல்லை?? :)))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

இரசிக்க வைக்கும் வரிகள் இரசிகா :))

//வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன

வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேக தடைகளும்.//

சரிதானே!

தினேஷ் said...

முதல் முத்ததிற்கு ஒரு முத்தான கவிதை…

தினேஷ்