Friday, February 8, 2008

உன் பெயரைச் சொன்னாலே....

சுவரங்களையும் ரிதங்களையும்
சொல்லி புரிந்துக் கொள்ள முடியாது
இசைத்து பார்த்தால் தான் புரியும்..
ஆனால் புரிந்துக் கொண்டேன்,..
நீ என் பெயரை சொல்லும் போது!!

Thursday, January 31, 2008

என்றும்..எங்கும் ...நீ வாழ்க!!!

தொல்லையில்லாமல்..நான்
தொலைவில் நின்றேன்..
காதலியே உனை மறக்கவில்லை
எங்கிருந்தாலும். வாழும் காதல்..
வாழ்த்தும் உன்னைக் காதலியே..
காதல்காலம் இதயத்தில் செதுக்கிய
சிற்பம் போல இருக்குதடி..
நீ சாய்ந்த மார்பில் வேறோரு மாதை
நினைக்க மனது மறுக்கதடி..
விதியின் சதியில் திசைகள் கலைந்தோம்..
உன் நினைவு ஏனோ கலையாமல்..
என்னை நீ மறக்கவேண்டும்..
இன்பமாக வாழவேண்டும்...
கோடி காத தூரம் வந்தேன்..
கோடி வாழ்த்துக் கண்மனியே..
வாழும் காலம் யாவும் அன்பே..
இன்பமாக வாழு பெண்ணே..

Thursday, January 24, 2008

இதன் பெயர்தான் காதலோ???

கண்கட்டி வித்தை காட்டி
என்னுள் நுழைந்துகொண்டாயே
கரம் கொண்டு தடுத்து விட
முயற்சித்தேன் காற்றாய் மாறி
விரல்களுக்கிடையில்தவழுகின்றாய்.....

காற்றுக்கள் அனைத்தும் உன்
பெயரை சுமந்து வந்து
ரீங்காரம் இடுகின்றது
என் காதினிலே....

ஒவ்வொரு நிமிடமும்
உன் பெயரை வேதம் போல்
உச்சரிக்கின்றேன்...

கோயில் கற்பகிரகததில்
இறைவனுக்கு பதில்
உன் முகம்...

பாதத்தை மெதுவாய்
அடிவைத்து நடக்கின்றேன்
தரையில் காணும் மணல்துகல்களில்
உன் முகம் காண்பதால்...

இதற்கு பெயர் தான் காதலோ
காணும் அனைத்திலும்
உன் முகம்
கேட்கும் குரலனைத்தும்
உன் குரல்!!

Sunday, January 13, 2008

ஓய்வில்லா காதல்

அந்த நிலவும் ஓய்வு தேடிடும்
உன் முகத்தினில் இளைப்பாறிட,
அந்த அலைகள் ஓய்வு தேடிடும்
உன் பாதத்தில் பள்ளி கொண்டிட,
அந்த காற்றும் ஓய்வு தேடிடும்
உன் சுவாசத்தில் கலந்திட,
அந்த பிரம்மனும் ஓய்வு தேடுவான்.உன்னிடம்
உன் போல ஒருத்தியை படைத்திட, ஆனால்
நான் மட்டும் ஓய்வு கொள்ள மாட்டேன்
உன்னை காதலிப்பதை விட்டு.

Wednesday, January 9, 2008

கூடல் தரும் ஊடல் வேண்டுமடி!!!

குச்சிமிட்டாய் தரவில்லை என்பதற்காய்
பள்ளிக்குச் செல்ல மாட்டேனென்று
அடம்பிடிக்கும்
சிறுமியின் ஞாபகம் தான் வருகின்றது....
நம் ஊடலின் போது
நான் அம்மா வீட்டிற்குப் போகப்போகிறேனென்று
நீ அப்பாவித்தனமாக கூறும்போது....

சிலவேளை நானும் உரைப்பதுண்டு
போயேன்... போனால் எனக்கென்னவென்று...
ஆனாலும்
அப்போதெல்லாம்
எனக்குள்ளே நான் கேட்பதுண்டு...

அலுவலகம் செல்ல
வாசல் படி கடக்கும்போது
திரும்பிப்பார்த்து வாசலில்
உன் தரிசனம் தேடும் கண்களுக்கும்.....

உன் விரல் தொட்டு
வெட்டுண்டு மடிவதற்காகவே
வளரும் நகங்களுக்கும்....

உன் கைகளில் சிக்கி கசங்கி
எண்ணெய் தடவிக்கொள்ள
தவம்கிடக்கும்
என் வரண்ட கேசத்திற்கும்....

உன் கைபேசியிலுருந்து
அழைப்பு வராதா என்று
எதிர்பார்த்திருக்கும்
என் காதுகளுக்கும்....
இரவுநேர சிறு நடையின் போது
உன் கரம் பற்றிட
காற்றினில் துளாவும்
என் விரல்களுக்கும்....

குறும்பு செய்யும் உற்சாகத்தில்
உன்னோடு ஊடல் கொள்ள நினைக்கும்
என் மனதிற்கும்....

என்ன பதில் சொல்வதென்று...

Wednesday, January 2, 2008

உன் அன்பு...

உன்னனச் சந்திக்கும் பொழுது
உணர்ந்ததில்லை இந்தபாசப் பிணைப்பை
உணர்ந்த பின்பிரிக்க முடியவில்லை
உறவை....

உன் ஆண்மையின் வன்மை கண்டேன்
உன் அரவணைப்பில்...

மேகங்களுக்கிடையிலே வெண்தாமரைநடுவினிலே
மின்னலென பளிச்சிடும்உன் புன்னகையிலே
என் புன்னகை கண்டுசிலிர்த்த
என் உள்ளமெங்கும் பொங்கிவழிகிறது உன் அன்பு .......

Monday, December 31, 2007

முதல் முத்தம்...

என் நாசிக்குள் புகுந்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் அடர்த்தியில்
உள்ளங்கையின் நோக்கங்களை தொடர்ந்துபோக
சிரமமாகிவிடுகிறது ஒவ்வொரு முறையும்.

உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கி பயணித்துப் பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன

வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேக தடைகளும்.