Monday, December 10, 2007

தவிப்பு...

காணும் பொருட்கள் எல்லாம்
உன் நினைவைத் தூண்டுகிறது....
கண நேரந்தான் என்றாலும்
கனமான நேரமாய் கனக்கிறது....
இதுவரை நாம் அனுபவிக்காத பிரிவு
ஒன்றுமே செய்யத் தோன்றாத இறுக்கம்..
உன் வரவை எதிர்பார்ப்பது மட்டுமே
என் பிரதான வேலையாய்...
இந்த நிமிடம் நீ என் செய்வாய்
என்பது மட்டுமே என் எண்ணமாய்...
கலங்கின கண்களோடு கையசைத்தது
அப்படியே என் கண்களில்...
உன் நினைவுகளும் எனைச்சுற்றுமோ
எண்ணும் போதே ஒரு கலக்கம்....
என்றாவது என எதிர்பார்த்தது தான்
அது இன்றாகிப் போனதில் ஒரு தவிப்பு...
இனி இது வாடிக்கையாகிப் போனாலும்
இன்றைய நாளின் தவிப்பு மறக்காது....
இதோ... நீ வரும் நேரம் நெருங்க.....
கண் இமைக்கும் நேரதாமதத்தையும் விரும்பாமல்....
இமைக்காத கண்களோடு வழியில்விழி வைத்து
வாசல் பார்க்கிறேன்......
இதோ கொட்டும் அருவியின் சிரிப்புடன்...
ஏதோ சாதித்து விட்ட பெருமிதத்துடன்....
எனை அணைக்கத்துடிக்கும் கரங்களுடன்.....
அம்மா..என கட்டிகொள்கிறாள்.....
முதல் நாள் பள்ளி சென்று திரும்பும்.....என் அன்பு மகள்.....
இது வரை இருந்த தவிப்பு
பெருமையாய்...
பரவசமாய்.....
பெருமிதமாய்...மாறியது அக்கணம்.

2 comments:

G3 said...

அழகிய கவிதை. ரசித்தேன் :)

நாகை சிவா said...

எழுத்துக்களை சிறிதே சிறிதா போடலாமே!

நல்லா இருக்கு கவிதை :)

நம்ம வூட்டாண்ட வந்ததுக்கு நன்றி :)