Wednesday, December 12, 2007

மறக்க முடியுமா???

மறக்கமுடியுமா..
என் பள்ளி நாளை
மனதில்
பட்டாம்பூச்சி
பறந்தநாட்களை
மறக்கமுடியுமா..

சின்னவயதில்..
துள்ளிச்சிறகடித்த
பழைய நாளை
மறக்கமுடியுமா..

சோவென்று மழைகொட்ட
புத்தகப்பையை
தூக்கி
எறிந்து..
சேற்றில் காலடித்து..
குளித்து
மகிழ்ந்ததுவும்..
காய்ச்சல் வந்து..
வீட்டில்..எல்லாரும்..
விழுந்து விழுந்து
கவனித்ததுவும்..
மறக்கமுடியுமா..

சுற்றுலா நேரத்தில்..
வாத்தியாரை ஏய்த்துவிட்டு..
பிரிந்து சென்று..
மகிழ்ந்ததுவும்..
பேச்சு விழுமென்று..
விட்டுவிட்டு போனதாக.
அழுது நடித்ததுவும்
மறக்கமுடியுமா..


பிரியும் நாளில்
நெஞ்சு கனத்து..
நண்பரெல்லாம்
அழுததையும்..
கணக்காசிரியர் காலைத் தொட்டு
ஆசி பெற்றதையும்..
என்னாயுள் நாளில் என்றேனும்..
மறக்கமுடியுமா..
எப்படி முடியும்.

8 comments:

Compassion Unlimitted said...

Arumayana varigal..ovvoruvar vaazhkaiyulum erpadakkudiya ponnana naatkal.
veda vin valaiyilurundu inge mudal murai
Adhu sari Kanakkasiriyarukku mattum en indha special respect ?
TC
CU

நாகை சிவா said...

பள்ளி நாட்களை நினைவு படுத்தி விட்டீர்கள். கூடவே அந்த வயதில் ஆரம்பிக்கும் இனக் கவர்ச்சியையும் தொட்டு இருக்கலாம். அதை தொட்டு இருந்தால் பள்ளி பருவம் முழுவதையும் அலசியது போல் அமைந்து இருக்கும்.

ரொம்பவே நல்லா இருக்கு :)

Itz me!!! said...

hi Rasiga.. Very true..school days and childhood are evergreen memories..very nice kavidhai :-)

Dreamzz said...

//சுற்றுலா நேரத்தில்..
வாத்தியாரை ஏய்த்துவிட்டு..
பிரிந்து சென்று..
மகிழ்ந்ததுவும்..
பேச்சு விழுமென்று..
விட்டுவிட்டு போனதாக.
அழுது நடித்ததுவும்
மறக்கமுடியுமா..//
haha!
nalla rasikum padiyaana kavidhai! brings me memories.

Rasiga said...

\\ Compassion Unlimitted said...
Arumayana varigal..ovvoruvar vaazhkaiyulum erpadakkudiya ponnana naatkal.
veda vin valaiyilurundu inge mudal murai
Adhu sari Kanakkasiriyarukku mattum en indha special respect ?
TC
CU\

மலரும் நினைவுகளை ரசித்ததிற்க்கு நன்றி,
கணக்காசிரியரின் தனிப்பட்ட கவனிப்பும், கண்டிப்பும் கிடைத்திராவிட்டால், கணிததில் தேர்ச்சி பெற்றிருக்க முடியாது!

Rasiga said...

\\ நாகை சிவா said...
பள்ளி நாட்களை நினைவு படுத்தி விட்டீர்கள். கூடவே அந்த வயதில் ஆரம்பிக்கும் இனக் கவர்ச்சியையும் தொட்டு இருக்கலாம். அதை தொட்டு இருந்தால் பள்ளி பருவம் முழுவதையும் அலசியது போல் அமைந்து இருக்கும்.

ரொம்பவே நல்லா இருக்கு :)\\

நாகை சிவா, நீங்கள் கூறுவதுபோல் பள்ளி பருவத்திற்க்கே உரித்தான இனக்கவர்ச்சியையும் கோர்த்திருக்கலாம், நல்லதொரு குறிப்பு, நன்றி!

Rasiga said...

\\ Itz me!!! said...
hi Rasiga.. Very true..school days and childhood are evergreen memories..very nice kavidhai :-)\\

Thanks Itz me!!

Rasiga said...

\\ Dreamzz said...
//சுற்றுலா நேரத்தில்..
வாத்தியாரை ஏய்த்துவிட்டு..
பிரிந்து சென்று..
மகிழ்ந்ததுவும்..
பேச்சு விழுமென்று..
விட்டுவிட்டு போனதாக.
அழுது நடித்ததுவும்
மறக்கமுடியுமா..//
haha!
nalla rasikum padiyaana kavidhai! brings me memories.
\\

Dreamzz, hope you enjoyed your evergreen memories of those good old student life. Thanks for your visit.