Wednesday, January 9, 2008

கூடல் தரும் ஊடல் வேண்டுமடி!!!

குச்சிமிட்டாய் தரவில்லை என்பதற்காய்
பள்ளிக்குச் செல்ல மாட்டேனென்று
அடம்பிடிக்கும்
சிறுமியின் ஞாபகம் தான் வருகின்றது....
நம் ஊடலின் போது
நான் அம்மா வீட்டிற்குப் போகப்போகிறேனென்று
நீ அப்பாவித்தனமாக கூறும்போது....

சிலவேளை நானும் உரைப்பதுண்டு
போயேன்... போனால் எனக்கென்னவென்று...
ஆனாலும்
அப்போதெல்லாம்
எனக்குள்ளே நான் கேட்பதுண்டு...

அலுவலகம் செல்ல
வாசல் படி கடக்கும்போது
திரும்பிப்பார்த்து வாசலில்
உன் தரிசனம் தேடும் கண்களுக்கும்.....

உன் விரல் தொட்டு
வெட்டுண்டு மடிவதற்காகவே
வளரும் நகங்களுக்கும்....

உன் கைகளில் சிக்கி கசங்கி
எண்ணெய் தடவிக்கொள்ள
தவம்கிடக்கும்
என் வரண்ட கேசத்திற்கும்....

உன் கைபேசியிலுருந்து
அழைப்பு வராதா என்று
எதிர்பார்த்திருக்கும்
என் காதுகளுக்கும்....
இரவுநேர சிறு நடையின் போது
உன் கரம் பற்றிட
காற்றினில் துளாவும்
என் விரல்களுக்கும்....

குறும்பு செய்யும் உற்சாகத்தில்
உன்னோடு ஊடல் கொள்ள நினைக்கும்
என் மனதிற்கும்....

என்ன பதில் சொல்வதென்று...

7 comments:

தினேஷ் said...

நல்ல கவிதை என்பதைவிட மகிழ்ச்சியான கவிதை...

//உன் விரல் தொட்டு
வெட்டுண்டு மடிவதற்காகவே
வளரும் நகங்களுக்கும்....//
நல்ல வரிகள்…

தினேஷ்

மே. இசக்கிமுத்து said...

அருமையான நடையில் எழுதியிருக்கிறீர்கள்!! கூடல் தரும் ஊடல் வாழ்க்கையில் வளம் சேர்க்கும்!!!

Dreamzz said...

nice :)

Rasiga said...

\\Collapse comments

தினேஷ் said...
நல்ல கவிதை என்பதைவிட மகிழ்ச்சியான கவிதை...

//உன் விரல் தொட்டு
வெட்டுண்டு மடிவதற்காகவே
வளரும் நகங்களுக்கும்....//
நல்ல வரிகள்…

தினேஷ்\\

Rasiththu makzhinthathirkku nandri Dinesh.

Rasiga said...

\\ இசக்கிமுத்து said...
அருமையான நடையில் எழுதியிருக்கிறீர்கள்!! கூடல் தரும் ஊடல் வாழ்க்கையில் வளம் சேர்க்கும்!!!\

Welcome to my page Isakkimuththu, thanks for your comment.

Rasiga said...

\\ Dreamzz said...
nice :)
\\

Thanks Dreamzz.

நித்யன் said...

“ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் ” - வாழிய வள்ளுவம்...
வாழிய காதல்...
வாழிய இரசிகா...